ஜான்பீட்டர் இசையமைத்து, வி.எஸ்.பழனிவேல் என்பவர் இயக்கியுள்ள ‘சாயா’ படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.. இந்த விழாவில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் நமீதா ஆகியோர் கலந்துகொண்டனர்.. பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார். இந்த விழாவில் குழந்தைகளுக்கு ஆதரவாக அதேசமயம் பெற்றோருக்கு அறிவுரை கூறும் விதமாக நமீதா சில கருத்துக்களை கூறினார். அவர் பேசியதிலிருந்து..
“நான் சொல்லப்போகும் இந்த விஷயத்தை பிரபலங்கள் யாரும் மேடையில் சொல்ல மாட்டார்கள். நான் சொல்கிறேன். இன்று பாலியல் சீண்டல்கள் குழந்தைகளுக்கு எதிராக நிறைய நடக்கின்றன. நம் அருகிலிருந்து கூட நடக்கின்றன. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி மட்டும் கொடுத்தால் போதாது, நல்ல டியூஷன் மட்டும் கொடுத்தால் போதாது. நிறைய சொல்லிக் கொடுக்க வேண்டும். எது குட் டச் எது, பேட் டச் எது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளிடம் நிறைய கேளுங்கள், நிறைய பேசுங்கள் .இதை அம்மா அப்பா இரண்டு பேருமே செய்யுங்கள் இந்தப் படம் குழந்தைகள் பற்றி சிந்திக்க வைக்கும்படி இருக்கும் என நம்புகிறேன்” என்று வாழ்த்தினார் நமீதா.
Comments are closed.