பிப்-16ல் ‘நாகேஷ் திரையரங்கம்’ திறப்புவிழா..!

260

nagesh thiraiyarangam

பழைய சினிமா திரையரங்கத்தை அதாவது டூரிங் டாக்கீஸ் ஒன்றின் பின்னணியில் உருவாக்கப்பட்டு வரும் படம் தான் ‘நாகேஷ் திரையரங்கம்’.. இந்தப்படத்தின் நாயகனாக ஆரி நடித்துள்ளார். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,’ ‘இனிமே இப்படித்தான்’ ஆகிய படங்களில் நடித்த ஆஷ்னா சவேரி நாயகியாக நடித்துள்ளார்.

ஒரே ‘ஷாட்’டில் எடுக்கப்பட்ட ‘அகடம்’ படத்தை இயக்கி, ‘கின்னஸ்’ சாதனை படைத்த ஈசாக் டைரக்டு செய்துள்ள படம், இது. இவர்களுடன் காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர், மனோபாலா, சித்ராலட்சுமணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் லதாவும், சித்தாராவும் நடித்து இருக்கிறார்கள்.

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் ஈசாக், “தமிழ் சினிமாவில் இன்று வரை எண்ணற்ற திகில் படங்களும், பேய் படங்களும் வந்திருந்தாலும், அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில், திரையரங்கில் பேய் என்ற புதிய கோணத்தில், படம் உருவாகி இருக்கிறது” என்று கூறினார்..

வரும் பிப்-16ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது.

Comments are closed.