மக்களை மனதை தனது நகைச்சுவையால் கொள்ளையடித்தவர் மறைந்த நடிகர் நாகேஷ் அவர்கள். அவருக்கு தி.நகரில் ‘நாகேஷ் திரையரங்கம்’ என ஒரு தியேட்டரே சொந்தமாக இருந்தது. தற்போது அந்த தியேட்டரின் பெயரிலேயே ‘நாகேஷ் திரையரங்கம்’ என ஒரு படம் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் ஆரி ஜோடியாக ஆஷ்னா சவேரியும் நகைச்சுவைக்கு காளிவெங்கட்டும் முக்கிய வேடங்களில் சீனியர் நடிகைகளான லதா மற்றும் சித்தாராவும் நடிக்கிறார்கள். மும்பையை சேர்ந்த மாடல் அழகி மாஷும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தை ‘அகடம்’ என்ற திரைப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து கின்னஸில் இடம் பெற்ற ஐசக் இயக்குகிறார்.
ஆனால் இப்போது திடீரென நாகேஷின் மகன் ஆனந்த் பாபு “வரும் ஜூலை 15-ம் தேதி வெளியாக உள்ள இத்திரைப்படத்தை தயாரிப்பதற்கு முன்பாக எங்களிடம் முன்அனுமதி பெறவில்லை. இந்தப் படத்தால் எங்களது குடும்பத்துக்கு என உள்ள நற்பெயர் கெடும் சூழல் உள்ளது. மேலும் எங்கள் குடும்பத்தினரின் அனுமதியின்றி, விளம்பரத்துக்காக எனது தந்தையின் பெயரில் எடுக்கப்பட்ட படத்திற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் படத் தயாரிப்பாளர் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது திரையுலகினரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. பொதுவாக ஒரு படத்தின் பைனான்சியர்கள் தான் தங்களுக்கு சேரவேண்டிய பாக்கியை வசூலிக்க இப்படி கடைசிகட்டத்தில் வழக்கு தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்துவார்கள்..
ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதமே இதன் டைட்டில் உறுதி செய்ய்யப்பட்டது.. அக்டோபரில் பூஜையும் போடப்பட்டது. இதுகுறித்த விளம்பரங்கள் அடிக்கடி நாளிதழ்களில் வெளியாகின.. அப்போதெல்லாம் இதை கண்டுகொள்ளாத ஆனந்த்பாபு இப்போது வழக்கு தொடர்ந்திருப்பது ரொம்பவே சந்தர்ப்பவாதம் என பேசிக்கொள்கிறார்கள்.
அதுமட்டும் அல்ல நஷ்ட ஈடாக 50 லட்சம் கேட்டிருப்பது, ஆனந்த் பாபுவை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்களோ என்கிற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாம். அது ஒரு பக்க இருக்கட்டும், நாகேஷ் திரையரங்கம்’ என டைட்டில் வைப்பதால் நாகேஷின் பெயருக்கு என்ன களங்கம் வந்துவிட போகிறது என்ற கேள்விக்கு ஆனந்த்பாபு தான் விடைசொல்ல வேண்டும்..

Comments are closed.