மே-22ல் அருள்நிதி படம் ரிலீஸ்..!

175

‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என டைட்டிலிலேயே படத்தின் காமெடிக்கு மினிமம் கேரண்டி கொடுக்கிறார் இயக்குனர் என்.ஜே.ஸ்ரீகிருஷ்ணா. ஒழுக்கத்தில் முன்மாதிரியாக திகழும் ஒரு கிராமமும், அந்த ஒழுக்கம் தங்களக்கு அசௌகரியம் தருகிறது என கருதும் நாலு போலீசையும் பற்றிய கதை தான் இந்தப்படம்.

அதாவது போலீஸ் ஸ்டேஷன் இருந்தும் ஊரில் பிரச்சனையே இல்லையென்றால் எப்படி இருக்கும் என்கிற யோசனைக்கு இந்தப்படம் மூலம் கற்பனை வடிவம் கொடுத்திருக்கிறார். இந்தப்படத்தில் கதாநாயகன் அருள்நிதி போலீஸ். கதாநாயகி ரம்யா நம்பீசனா டீச்சர்.

அருள்நிதிக்கும், ரம்யாவுக்கும் சின்னவயதில் இருந்தாலும் சொல்லிக்கொள்ள மாட்டார்களாம். இப்படியே இதயம் முரளி’ மாதிரி சொல்லாமலேயே தவிக்கும் அருள்நிதி, ரம்யாவை கண்டவுடனே ‘ஜெய்ஹிந்த்’ கவுண்டமணி மாதிரி கனவுலகத்திற்குள் போய்விடுவாராம்.

கூடவே காமெடிக்கு சிங்கம்புலியும் பகவதி பெருமாளும் கூட்டணி சேர்ந்திருக்கின்றனர். ஜே.எஸ்.கே நிறுவனத்துடன் ‘லியோவிஷன்’ பட நிறுவனம் மற்றும் 7C என்டர்டெய்ன்மென்ட் ஆகியவை இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளன. வரும் மே-22ல் இந்தப்படம் ரிலீசாகிறது.

Comments are closed.