என் வழி தனி வழி – மீண்டும் ஆக்‌ஷன் ரூட்டில் ஆர்.கே..!

93

மலையாளத்தில் போலீஸ் படங்களை இயக்கியே புகழ்பெற்றவர் இயக்குனர் ஷாஜி கைலாஷ்.. தமிழிலும் கூட விஜயகாந்த், அஜீத் ஆகியோரை வைத்து அவர் இயக்கியதும் போலீஸ் படங்களே.. அதேநேரத்தில் புதுமுகமான ஆர்.கே.வை வக்கீல் வேடத்தில் நடிக்கவைத்து துணிச்சலாக ‘எல்லாம் அவன் செயல்’ படத்தை இயக்கினார். படமும் சூப்பர்ஹிட் ஆனது.

ஆர்.கே.வும் தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிப்பேன் என பிடிவாதம் பிடிக்காமல் ‘அவன் இவன்’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்தார். அதேசமயம் ஹீரோவாக நடிப்பதையும் அவர் கைவிடவில்லை. தனக்கு தமிழில் நல்லதொரு அறிமுகம் தந்த ஷாஜி கைலாஷின் டைரக்‌ஷனில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் ஆர்.கே.

படத்தின் பெயர் ‘என் வழி தனி வழி’. சூப்பர்ஸ்டாரின் ஃபேமஸான பன்ச் டயலாக் தான். இந்தப்படத்தில் ஆர்.கே.வுக்கு கடமை தவறாத நேர்மையான போலீஸ் அதிகாரி வேடம். கதாநாயகிகளாக பூனம் கவுரும் மீனாக்‌ஷி தீக்‌ஷித்தும் நடிக்கிறார்கள்.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் ரஷ்யாவை சேர்ந்த அட்லீனா கேத்தரீனா என்கிற புகழ்பெற்ற டான்ஸரை ஆடவைத்து படமாக்கியுள்ளார்கள். உலக அளவில் ரோப் டான்ஸ் ஆடுவதில் பிரசித்தி பெற்றவரான இந்த கேத்தரீனா முதன்முதலில் இந்தப்படத்தின் மூலம் தான் தமிழுக்கு, ஏன் இந்தியாவுக்கே இறக்குமதி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.