
பல வருடங்களுக்கு முன்பு ‘இது தாண்டா போலீஸ்’, ‘எங்கடா உங்க எம்.எல்.ஏ’ என டைட்டில் வைத்த அதிரடி தெலுங்கு படங்கள் தமிழில் டப்பிங் ஆகின. ஆனால் இன்று சுதீப் நடிக்கும் நேரடி தமிழ்ப்படத்திற்கு ‘முடிஞ்சா இவன பிடி’ என சவால் விடும் டைட்டிலை வைத்து இயக்கிவருகிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்.. நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார்.
‘கந்தசாமி’ வில்லன் முகேஷ் திவாரி, ‘பாண்டியநாடு’ வில்லன் சரத் லோஹித்சுவா என இரண்டு வில்லன்கள் சுதீப்புடன் மோத இருக்கிறார்கள்.. காமெடிக்கு சதீஷும் இமான் அண்ணாச்சியும் கூடவே நாசரும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்புதான் பெங்களூரில் நடைபெற்று முடிந்தது. தனது எதிர்கால சினிமா வாழ்க்கையை தீர்மானிக்கும் படம் என்பதால் அதிக கவனம் எடுத்து இதை இயக்கி வருகிறார் கே.எஸ்.ரவிகுமார்.
Comments are closed.