திரு. உதய் பிரகாஷ்—இசை அமைப்பாளர்,பின்னணி பாடகர் , பாடலாசிரியர், ரியாலிட்டி ஷோ பாடகர் என்ற பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்தி வரும் இளம் திறமை. அடையார் மியூசிக் காலேஜில் பட்டம் பெற்று, கடந்த 15 ஆண்டுகளாக இசை உலகில் பயணம் செய்து வருகிறார்.

212

 

ஒற்றைத் தாயாரின் உறுதியான ஆதரவுடன் மற்றும் நண்பர்களினின் ஆதரவுடன், பல சவால்களை தாண்டி, தனது இசைக் கனவை தொடர்ந்து வந்த உதயின் பின்னணி பாடல்கள் அதிக அளவில் கவனம் பெறாதபோதிலும், வாய்ப்புகளை உருவாக்கும் மனப்பாங்குடன் தனது பயணத்தை நீட்டித்தார்.

இன்று, அவரது மிகப் பெரிய கனவு நனவாகியுள்ளது. அவர் இசையமைத்த ‘மகாசேனா’ திரைப்படம் டிசம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. உதயின் இசைப் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்.

திரு. உதய் பிரகாஷ் மேலும் உயரங்களை அடைய எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். எதிர்காலத்தில் பல முக்கிய படைப்புகளும் வாய்ப்புகளும் அவரை நாடி வரட்டும்.

அவரது இசைப் பயணம் இன்னும் பல உயரங்களைத் தொட்டிடட்டும்.

Comments are closed.