“சொன்ன தேதியில் மோகன்லால் படம் ரிலீஸாகும்” – சீறிய இயக்குனர்

183

என்னது மோகன்லால் படம் ரிலீஸ் ஆகிறதுல பிரச்சனையா… சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா என அதிர்ச்சி அடையவேண்டாம்.. விஷயம் அந்த அளவுக்கு போகாது.. பிரச்சனை இதுதான்.. சமீபத்தில் நடைபெற்ற கேரள திரைப்பட கண்காட்சியாளர்கள் கூட்டமைப்பின் புதிய அலுவலக கட்டட திறப்புவிழாவை AMMA என்று சொல்லப்படுகின்ற நடிகர்சங்கத்தை சேர்ந்தவர்களும் FEFKA என்று அழைக்கப்படும் கேரள திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்களும் திரும்பிக்கூட பார்க்கவில்லையாம்.

இதனை தங்களுக்கு நேர்ந்த அவமானமாக கருதிய அந்த கூட்டமைப்பின் தலைவரும் பிரபல தயாரிப்பாளருமான லிபர்ட்டி பஷீர், இவர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகர்சங்க உறுப்பினரான மோகன்லால் நடித்து மே-8ஆம் தேதி வெளியாகவுள்ள ‘மிஸ்டர் ஃப்ராடு’ படத்தை தியேட்டர்களில் திரையிடுவதற்கு தடைவிதித்துள்ளார்.

இந்த தடை அறிவிப்பை கேட்டு கொதித்துப்போன படத்தின் இயக்குனர் உன்னிகிருஷ்ணன், “மோகன்லால் படம் சொன்ன தேதியில் ரிலீஸாகும். அப்படி அவர் படம் ரிலீஸாகவிட்டால் வேறு எந்தப்படமும் ரிலீஸாக முடியாது.. ரிலீஸாக விடமாட்டோம் என்று சவால் விடுத்துள்ளார்.

கேரள ஃபிலிம் சேம்பரோ இந்த பிரச்சனையை விரைவில் பேசித்தீர்க்குமாறு இரண்டு அமைப்புகளுக்கும்ம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நல்ல முடிவு கிடைக்கும் என நம்புவோம்..

Comments are closed.