பிடிக்காமல் போன பெண்ணுடன் வரும் காதலை சொல்லும் ‘மிஸ் யூ’

68

‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ ஆகிய ஹிட் படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இயக்கும் படம் ‘மிஸ் யூ’. இதில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார். கன்னட மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

கருணாகரன், பாலசரவணன், ‘லொள்ளு சபா மாறன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கே.ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பை கவனிக்கிறார். பாடல்களை மோகன்ராஜன் எழுதியுள்ளார்.

சித்தா என்கிற உணர்வுப்பூர்மான கதையம்சம் கொண்ட வெற்றிப் படத்திற்கு பிறகு, ஒரு அழகான காதல் கதையாக உருவாகியுள்ள ‘மிஸ் யூ’ படத்தில் சித்தார்த் நடிப்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படம் பற்றி இயக்குநர் என்.ராஜசேகர் கூறும்போது, “ஆண்-பெண் நட்பு, அன்பு, காதலை பற்றி சினிமாவில் சொல்வதற்கு இன்னும் தீராத அளவிற்கு விஷயங்கள் இருக்கிறது. காதல் வரும்போது அழகாக மாறும் நம் உலகம், அதன் தோல்வியை பார்க்கும்போது வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடும். அப்படி ஒரு லவ் பிரேக்கப்பிற்கு பிறகு பிடிக்காமல் போய்விட்ட பெண்ணோடு ஒரு சாமானிய இளைஞனுக்கு வரும் காதல் தான் இந்தப்படத்தின் கதை.

மீண்டும் ஒரு நிஜமான காதல் படத்திற்காக சினிமா விரும்பிகள் காத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சித்தார்த், இந்தக்கதையை கேட்டதும் உடனே கிரீன் சிக்னல் காட்டிவிட்டார். நாயகி சுப்புலட்சுமியாக கன்னட, தெலுங்கு திரையுலகில் பிரபலமான ஆஷிகா ரங்கநாத் தமிழில் அறிமுகமாகிம் இவரை “மிஸ் யூ” படம் வெளியான பிறகு பெண்களே லவ் யூ என சொல்லும் விதமாக ரசிகர்களை கவருவார்.

எட்டு பாடல்கள் மூலம் மீண்டும் ஜிப்ரன், இசை ரசிகர்களின் மனங்களை கவர்கிறார்.

Comments are closed.