
மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் படம் தான் ‘மீகாமன்’. இந்தப்படத்தில் ஆர்யாவுடன் ஏழு வில்லன்கள் மோதுகிறார்கள் என சில தினங்களுக்கு முன்பு ஒரு பரபரப்பான செய்தி கிளம்பியதால் திரையுலகினரின் கவனம் இப்போது ‘மீகாமன்’ பக்கம் திரும்பியுள்ளது.
தற்போது இந்தப்படம்சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் பற்றிய படமாக உருவாகிறது என இன்னொரு செய்தியும் கிளம்பியுள்ளது. இதுகுறித்த விசாரணையில் ஆழமாக இறங்கியதில் அது உண்மைதான் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப்படத்தில் ஆர்யா ஒரு புத்திசாலி திருடனாக நடிக்கிறாராம்.
ஹாங்காங், மெக்ஸிகோ போன்ற வெளிநாடுகளில் உள்ள இந்த போதைமருந்து கடத்தல் கும்பல் பற்றி, இயக்குனர் மகிழ்திருமேனி மற்றும் அவரது டீம் நிறையவே ஆராய்ச்சி செய்துவிட்டுத்தான் களத்தில் இறங்கியுள்ளனராம். தற்போது கோவாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
Comments are closed.