தற்போது ‘வடகறி’ படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் துரிதமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப்படத்தின் இசைவெளியீட்டை விரைவில் நடத்த இருக்கிறார்கள். படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமையை மீகா என்கிற ஆடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனம் வெளியிடும் முதல் இசை ‘வடகறி’ படத்தினுடையது தான்.
சுப்பிரமணியபுரம்’ படத்தில் இணைந்து நடித்த ஜெய்-சுவாதி ஜோடி, மீண்டும் ‘வடகறி’ என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஜெய், சுவாதி மீண்டு இணைந்து நடிப்பது ஒருபக்கம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றால், இன்னொரு பக்கம் மும்பை கவர்ச்சி நடிகை சன்னிலியோன் இந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருப்பது எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது.
க்ளவுட் நைன் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப்படத்தை சரவணராஜன் இயக்கியுள்ளார். புதிய இசையமைப்பாளர்கள் விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் இசையமைத்திருக்கிறார்கள். இவர்கள் இசையைப்பாளர் அணிருதின் சவுண்ட் இன்ஜினியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை சம்மர் ரிலீஸாக வெளியிட தீர்மானித்துள்ளார்களாம்.
Comments are closed.