
கடந்த வெள்ளியன்று நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மாயா’ திரைப்படம் இதுவரை தமிழில் வெளியான ஹாரர் படங்களில் இருந்து சற்றே மாறுபட்டு இருந்தது. குறிப்பாக பேய்ப்படங்களில் வழக்கமாக இடம்பெறும் கதை சொல்லல் உத்திகளிலும், மேக்கிங்கிலும் இருந்து மாறுபட்டு, வித்தியாசம் காட்டியிருந்தார் இயக்குனர் அஸ்வின் சரவணன்.
இந்த விஷயங்களால் இங்கேயுள்ள ரசிகர்களை இந்தப்படம் கவர்ந்ததில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக ஹாரர் படங்களாக எடுத்து தள்ளும் ஹாலிவுட் இயக்குனர் டேவிட் எரிக் இங்கிலாந்து என்பவரை வசீகரித்துவிட்டதுதான் ஆச்சர்யம்..
‘மாயா’ படத்தை பார்த்துவிட்டு அதன் மேக்கிங்கிற்காகவும் பின்னணி இசைக்காகவும் பாராட்டிய எரிக், குறிப்பாக அதில் நடித்த இளம்பெண்ணின் (நயன்தாராவைத்தான் இப்படி குறிப்பிடுகிறார்) நடிப்பும் மிகவும் அருமை என்றும் இந்திய சினிமாக்கள் மேல் தனக்கு மிகப்பெரிய மரியாதையே வந்துவிட்டது எனவும் பாரட்டுக்களை தெரிவித்துள்ளார்.
Comments are closed.