பூசணிக்காய் உடைத்தனர் தர்மதுரையும் மருதுவும்…!

217

dharmadurai - marudhu shooting wrapped
சீனு ராமசாமி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய்சேதுபதி நடித்துவரும் படம் தான் ‘தர்மதுரை’.. இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.. அதேபோல கொம்பன் முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்துவரும் படம் ‘மருது’.. இதில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த இரண்டு படங்களுமே கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்ப்ம் மதுரை, தேனி, ராஜாபாளையம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்து பூசணிக்காய் உடைத்து படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர்.

Comments are closed.