மறைந்திருந்த பார்த்த மர்மம் விலகியது ; கிடைத்தது U/A சான்றிதழ்..!

92

mpme censor

இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’.. இந்தப்படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனாவும் நடிக்கின்றனர். இந்த தலைப்பிற்கும், கதைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. காரணம் இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்தி கதை நகர்கிறது.

Related Posts

இத்தனைக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், சில தீர்வுகளையும் முன் வைத்திருக்கிறது இந்தப்படம். பெண்களின் அழகு என்பது அவர்களின் நடவடிக்கைகளிலும், ஆளுமையிலும் தான் இருக்கிறதே தவிர அவர்கள் அணியும் ஆபரணங்களில் அல்ல அந்த ஆபரணங்களால் பெண்களுக்கு விளைவது தொல்லையே.. அது ஆபத்தை நம் வீடுதேடி அழைத்து வருகிறது. அதுபற்றிய பாதுகாப்பை வலியுறுத்தியே இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட படத்தையே பாடாய்ப்படுத்தித்தான் சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் பேச்சுவழக்கில் இருக்கும் ஒரு வார்த்தையை அனுமதித்த சென்சார், அதே வார்த்தையை இந்தப்படத்தில் அனுமதிக்க மறுத்துள்ளது.. அதேபோல ரத்தக்காட்சிகளுடன் சில படங்களுக்கு ‘U’ சான்றிதழ் கொடுத்திருக்கும் அதே சென்சார் தான், இந்தப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியிருக்கிறது

Comments are closed.