‘தென்னிந்தியாவில் சூப்பர் ஹீரோக்கள் இருந்திருந்தால்’ – மனோபாலாவின் காமெடி வீடியோ..!

196

இணையதள வீடியோக்களில் பதிவு செய்வதற்காக, நகைச்சுவை நிறைந்த துணுக்கு சித்திரங்களை உருவாக்குவதில் பிரபலமானவர்கள் தான் மும்பையை சேர்ந்த கல்ட்சர் மெஷின் என்கிற நிறுவனம்.. தென்னிந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதத்தில், நகைச்சுவை ததும்ப, வீடியோக்களை உருவாக்கி, உலகமெங்கிலும் உலாவர செய்கிறது இந்த நிறுவனம்

இவர்களின் கடந்த கால காமெடி வீடியோக்கள் பல நெட்டில் வைரலாக வலம் வந்தன. சமீபத்தில் கூட ‘என்னடா ராஸ்கல்ஸ்’ என வீடியோவை தயாரித்துள்ளார்கள். இது சென்சாரும் செய்யப்ப்ட்டுவிட்டதாம். தற்போது ‘அவெஞ்சர்ஸ் ப்ரம் சவுத் இந்தியா’ என்கிற வீடியோவை உருவாக்கியுள்ளது இந்த நிறுவனம். அதாவது தென்னிந்தியாவில் இருந்து சூப்பர் ஹீரோக்கள் வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த வீடியோக்களின் தீம்.

ஹைதராபாத்தில் இருந்து ‘ஹல்க்’க்கும் சென்னையில் இருந்தும் ‘பிளாக் விடோ’வம், கேரளாவில் இருந்து ‘அயன் மேனு’ம் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.. தற்போது இந்த ‘அவெஞ்சர்ஸ் ப்ரம் சவுத் இந்தியா’ விடியோவின் ஒரு பகுதியாக நடிகர் மனோபாலாவை வைத்து ‘புட் சட்னி’ (put chutney) என்கிற வீடியோவை உருவாக்கியுள்ளார்கள். இதில் டைரக்டர் பியூரி ஆக வருகிறார் மனோபாலா. கடந்த முறை நடிகர் டெல்லி கணேஷை வைத்து இதேபோல ஒரு வீடியோவை வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.