செப்-15ல் ‘மகளிர் மட்டும்’ ரிலீஸ்..!

232

magalir mattum release

36 வயதினிலே’ படம மூலம் தனது இரண்டாவது இன்னிங்க்சை வெற்றிகரமாக துவங்கியுள்ள ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மகளிர் மட்டும்’.. கமல் நடித்த ‘மகளிர் மட்டும் போல’ இந்தப்படமும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் ஜோதிகாவுடன் சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா என மூன்றும் இன்னும் மூன்று கதாநாயகிகளாக நடித்துள்ளனர்..

குற்றம் கடிதல்’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பிரம்மா இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை வரும் செப்-15ல் ரிலீஸ் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். சூருயாவின் 2டி நிறுவனம் தான் இந்தப்படத்தையும் தயாரித்துள்ளது.

Comments are closed.