ஜன-19க்கு தள்ளிப்போன ‘மதுரவீரன்’ ரிலீஸ்..!

265

madura veeran

‘சகாப்தம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான, விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் அடுத்து கதாநாயகனாக நடித்துள்ள ’மதுரவீரன்’ பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் ரிலீஸ் தேதியை ஜன-19க்கு மாற்றி வைத்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கும் இந்தப்படத்தில், சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுகம் நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, ‘வேல’ராமமூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ’நான் கடவுள்’ ராஜேந்திரன், பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தை டைரக்சன் பண்ணுவதுடன் ஒளிப்பதிவு செய்யும் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார் பி.ஜி.முத்தையா.

ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்ட படம் இது வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் இளைஞராக சண்முக பாண்டியனின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Comments are closed.