
சூர்யாவும் மாதவனும் ‘ஆயுத எழுத்து’ படத்தில் நடித்தபோதிருந்தே நல்ல நட்பை தொடர்ந்து வருகிறார்கள். தற்போது மாதவன் நடித்து இந்தியில் ‘தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்’ படம் வெளியாகி வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. மாதவனுக்கு ஜோடியாக கங்கணா ரணவத் நடித்துள்ளார்.
ஆனந்த் எல்.ராய் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படம் பார்த்துவிட்டு, “தனு வெட்ஸ் மனு கொண்டாட்டத்தை நானும் பார்த்தேன்.. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள் ப்ரோ” என தனது ட்விட்டர் பக்கத்தில் மாதவனை பாராட்டியுள்ளார் சூர்யா.
Comments are closed.