“மஸ்காரா போட்டு மயக்குறியே…”, “மக்காயலா மக்காயலா…”, “வேலா வேலா வேலாயுதம்…”, “உசுமுலாரசே உசுமுலாரசே…”, “செக்ஸி லேடி கிட்ட வாடி…”, “மனசுக்குள் புது மழை விழுகிறதே..” போன்ற ஹிட் பாடல்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியர் பிரியன் ’அரணம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். ராட்டினம், எட்டுத்திக்கும் மதயானை, சத்ரு போன்ற திரைப்படங்களின் கதைநாயகன் லகுபரன் மற்றும் கீர்த்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நித்தின் கே.ராஜ் மற்றும் இ.ஜே.நெளசத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சாஜன் மாதவ் இசையமைத்துள்ளார். பிரியன், முருகானந்தம், பாலா, சஹானா ஆகியோர் பாடல்கள் எழுத, பி.கே படத்தொகுப்பு செய்துள்ளார். பழனிவேல் கலை இயக்குநராக பணியாற்ற, ரக்கர் ராஜ்குமார் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். ராம்சிவா மற்றும் ஸ்ரீசெல்வி நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிரியன் இயக்கியிருக்கும் இப்படத்தை தமிழ்த்திரைக்கூடம் தயாரித்துள்ளது.

இப்பத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. முன்னணி நிருபர்கள் முன்னிலையில் படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து விரைவில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
Comments are closed.