அருண் விஜயின் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தை கைப்பற்றிய லைகா நிறுவனம்

259

சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் எப்போதும் நல்ல படங்களுக்கு மதிப்பு தரக்கூடியது. தனித்துவமான கதைகள் மற்றும் நம்பிக்கைக்குரிய உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்து வெற்றிகரமாக விநியோகித்து வருகிறது. இதன் மூலம் இதுபோன்ற திட்டங்களுக்கு பிரம்மாண்டமான வெற்றியை சேர்க்கிறது. லைகா புரொடக்‌ஷனின் இந்த லீக்கின் சமீபத்திய வரவாக எம். ராஜசேகர் & எஸ் சுவாதி தயாரிப்பில், நடிகர் அருண் விஜய்யின் ‘அச்சம் என்பது இல்லையே’ திரைப்படம்  இணைந்துள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைப் பார்த்தப் பிறகு, அனைத்துத் தரப்பிலான பார்வையாளர்களையும் கவரும் அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்துள்ளது. மொழிகளைத் தாண்டி, அனைத்து தரப்பினருக்கும் போய் சேரும் வகையிலான கதையம்சத்தைக் கொண்டுள்ளதால், நான்கு வெவ்வேறு மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட லைகா முடிவு செய்துள்ளது. படத்தின் ட்ரைய்லர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

பாராட்டும்படியான படைப்புகளை சரியானத் திட்டமிடலுடன் கொடுக்கக்கூடிய இயக்குநர் விஜய்யின் திறமை, அவரைத் தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான இயக்குநராக மாற்றி இருக்கிறது. 70 நாட்களில் அவர் சென்னை மற்றும் லண்டனில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஏமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு வருகிறார். மலையாளத் திரையுலகில் தனது நடிப்புத் திறனுக்கு பல பாராட்டுகளைப் பெற்ற நடிகை நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை எம். ராஜசேகர் & எஸ் சுவாதி தயாரித்துள்ளனர் மற்றும் வம்சி, பிரசாத் கோதா மற்றும் ஜீவன் இணைந்து தயாரித்துள்ளனர்.

Comments are closed.