
இரண்டு தினங்களுக்கு முன் மறைந்த இயக்குனர் ஆர்.சி.சக்தி, வெகு சில படங்களையே இயக்கியிருந்தாலும் தனது படைப்புகளுக்காகவே இன்றுவரை பேசப்படுபவர்.. கமல் நடித்த ‘உணர்ச்சிகள்’ படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் அறிமுகமான சக்தி, பின்னாளில் கமலின் மனம் கவர்ந்த இயக்குனராக, நண்பராகவே மாறினார்.
கமல் தான் கலந்துகொள்ளும் இலக்கிய மேடைகளில் ஆர்.சி.சக்தியின் பேரை எந்த விதத்திலாவது சொல்லாமல் இருக்கவே மாட்டார். அந்த அளவுக்கு நட்பு பிணைப்பு கொண்ட கமல், ஆர்.சி.சக்திக்கு இறுதி மரியாதை செலுத்தவந்தபோது ரொம்பவே உடைந்து போயிருந்தார்..
“சக்தி எனது மிகச்சிறந்த நண்பன்.. நட்பாக ஆரம்பித்து எனது குடும்பத்தில் ஒருவராக மாறியவர். அப்படி ஒரு நண்பனை பார்த்திருக்கவே முடியாது. ஒவ்வொருவருக்கும் அப்படி ஒரு நண்பன் கிடைக்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என சக்திக்கும் தனக்குமான ஆத்மார்த்த நட்பை வெளிப்படுத்தினார்.
Comments are closed.