
வெளியாவதற்கு முன்பே பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு சர்வதேச விருதுகளை பெற்றதுடன் தேசிய விருதையும் பெற்ற ‘குற்றம் கடிதல்’ படம்.. விருதுகளை வெல்லும் ஒரு சராசரி கலைப்படமாக இல்லாமல். விறுவிறுவென நகர்ந்து செல்லும், நெஞ்சை படபடக்க வைக்கும் ஆழ்ந்த சமூக கருத்துடன் கூடிய ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.
ஐந்து பல்வேறு வாழ்க்கை தரத்தை சேர்ந்த மக்களின் ஒரு நாள் வாழ்க்கை, அந்த ஒரு நாளில் ஏற்படும் சம்பவம், அதன் அடிப்படையில் வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்களை சித்தரிக்கும் கதைதான் இந்த ‘குற்றம் கடிதல்’. இந்தப்படத்தை இயக்கியுள்ளவர் அறிமுக இயக்குனரான பிரம்மா.
இந்தப்படத்தை தயாரித்துள்ளவர் வெளிநாட்டில் வாழும் இந்தியரான கிறிஸ்டி. தரமான படங்களை தயாரித்து வெளியிடும் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் நிறுவனம் தான் இதன் விருதுகளின் வெற்றிக்கு பின்னணியில் பலமான தூணாக உள்ளது. பலமுறை இதன் ரிலீஸ் தாமதமாகி, தற்போது வரும் செப்-24ல் இந்தப்படத்தை ஜே.எஸ்.கே பிலிம்ஸ் ரிலீஸ் செய்ய இருக்கிறது.
Comments are closed.