பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் ‘குற்றம் கடிதல்’..!

207

தரமான படங்களை தயாரித்து வெளியிடும் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் நிறுவனம் நல்ல படங்களை வெளியிடுவதன் மூலம் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு இந்திய அரங்கில் மட்டுமல்லாது உலா அரங்கில் தமிழ்சினிமாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்து வருகிறது.

இது ஜே.எஸ்.கே பிலிம்சின் ராசியாகவே ஆகிவிட்டது என்றுகூட சொல்லலாம். அந்தவகையில் இந்த வருடம் இந்தியன் பனோரமா திரைப்பட விழாவில் கலந்துகொண்ட 181 படங்களில் தேர்வு செய்யப்பட 26 படங்களில் ஜே.எஸ்.கே நிறுவனத்தின் ‘குற்றம் கடிதல்’ மட்டுமே தமிழ்ப்படம்..

இதுமட்டுமல்ல, ஜிம்பாப்வே திரைப்பட விழா, மும்பை திரைப்பட விழா, ஆகிய திரைப்பட விழாக்களிலும் அங்கீகாரம், மற்றும் கௌரவத்தையும் பெற்றுத்தந்தது போல இப்போது பெங்களூருவில் நடைபெற உள்ள 7-வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தகுதி பெற்று இருக்கிறது ‘குற்றம் கடிதல்’.

இந்தப்படத்தை இயக்கியுள்ளவர் அறிமுக இயக்குனரான பிரம்மா. ஐந்து பல்வேறு வாழ்க்கை தரத்தை சேர்ந்த மக்களின் ஒரு நாள் வாழ்க்கை, அந்த ஒரு நாளில் ஏற்படும் சம்பவம், அதன் அடிப்படையில் வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்களை சித்தரிக்கும் கதைதான் இந்த ‘குற்றம் கடிதல்’.

இதுபற்றி தயாரிப்பாளர் சதீஷ்குமார் சொல்லும்போது, “ஒவ்வொரு விடியலும் எங்களுக்கு நல்ல சேதியை தந்துகொண்டு இருக்கிறது. இந்த சந்தோஷத்தை சொல்லில் அடக்க முடியாது. தரமான படங்கள் தயாரிக்கும் பணியை நான் இப்போது பயிற்சியாக மேற்கொண்டு, பின்னாளில் அதை எனது வழக்கமாக மாற்றுவேன்” என்கிறார் பூரிப்புடன்.

Comments are closed.