விவேக் படத்திற்கு கேரள அமைச்சர் பாராட்டு

264

ezhumin

தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றி உருவாகியுள்ள படம் ‘எழுமின்’ விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் மூலம் சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் “எழுமின்” திரைப்படத்தின் டிரைலரை பார்த்த கேரள விளையாட்டு மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. A.C. மொய்தீன், கேரள முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் அவர்களின் உள்துறை செயலாளர் திரு. M.V. ஜெயராஜன் ஆகியோர் படக்குழுவினரை அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், இதுபோல சமூகத்திற்கு நல்ல கருத்துக்கள் கூறும் படங்களைத் தொடர்ந்து எடுக்க வாழ்த்துகளையும் கூறியுள்ளனர்.

Comments are closed.