கால் டாக்சி ட்ரைவர் ஆனார் காவ்யா மாதவன்..!

241

கேரளாவில் பெண்கள் மட்டுமே ட்ரைவராக ஓட்டக்கூடிய கால் டாக்சி நிறுவனம் தான் ‘SHE-TAXI’. தற்போது இதே பெயரிலேயே கால் டாக்சியை மையப்படுத்தி ஒரு படம் மலையாளத்தில் தயாராகிறது. ஷாஜி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கால் டாக்சி ட்ரைவராக நடித்திருக்கிறார் காவ்யா மாதவன்.

காவ்யாவிடம் ட்ரைவிங் லைசென்ஸ் இருக்கிறதே தவிர கார்களை அவ்வளவாக ஓட்டி அவருக்கு பழக்கமில்லை. அதிலும் இந்தப்படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டது பவர் ஸ்டியரிங் இல்லாத ஒரு அம்பாசிடர் கார். படப்பிடிப்புக்கு சில நாட்கள் முன்னதாக ஒரு அம்பாசிடர் காரை காவ்யா மாதவன் வீட்டில் நிறுத்தியும் கூட, அவரால் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை.

ஷூட்டிங் நாள் வந்துவிடவே, கார் ஓட்டும் காட்சிகளில் காவ்யாவுக்கு டூப் போட்டுவிடலாம் என இயக்குனர் நினைக்க, அதெல்லாம் முடியாது என கூறிய காவ்யா தானே ட்ரைவிங் செய்ய ஆரம்பித்தார். போகப்போக ட்ராபிக்கான சாலைகள், மலைப்பாதைகள் எல்லாவற்றிலும் கைதேர்ந்த டாக்சி ட்ரைவர் போல அவரே ஓட்ட ஆரம்பித்துவிட்டாராம்.

குறிப்பாக படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருந்து அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கும் கூட தினசரி அதே காரை கிட்டத்தட்ட      25 கிமீ தூரம் ஓட்டிக்கொண்டு சென்று வந்தாராம். கடைசியில் ஒரு சிறப்பம்சமாக இப்போது தனது படப்பிடிப்புகளுக்கு தானே கார் ஓட்டிச்செல்ல ஆரம்பித்துவிட்டாராம் காவ்யா மாதவன்.

 

Attachments

Comments are closed.