மதயானை கூட்டம், விக்ரம் வேதா உட்பட தான் நடிக்கும் படங்களில் தனித்து தெரிபவர் நடிகர் கதிர்.. அந்தவகையில் கதிர் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியுள்ளது.. அறிமுக இயக்குநர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார்.. இவர் ‘மன்னார் வளைகுடா’ இயக்கிய பிரபாகரனின் உதவி இயக்குநர்.
படம் பற்றி இயக்குநர் கூறும்போது , ‘இது கிராமத்திலிருந்து நகரம் செல்கிற கதை. கிராமத்திலிருக்கும் வாலிபனான நாயகன் ஒரு பெரிய பிரச்சினைக்காக சென்னை செல்ல வேண்டியிருக்கிறது. நாயகன் அந்தப் பிரச்சினையை எப்படி எதிர்கொண்டான் முடிவு என்ன என்பதே கதை. அது என்ன பிரச்சினை? சமீபத்தில் நாட்டையே கலங்க வைத்த பிரச்சினைதான் அது. கிட்டத்தட்ட விக்ரமுக்கு ‘தூள்’ படம்போல கதிருக்கு இந்தப்படம் அமையும் என்கிறார்கள்.
இப்படத்தின் கதையை உருவாக்கி அதற்கான சரியான நாயகன் தேடிய போது வெகு பொருத்தமாகக் கிடைத்தவர்தான் கதிர். அவர் கதை பிடித்து சம்மதித்தவுடன் எங்களுக்கு முழு திருப்தி.கதிருக்கு ‘மதயானைக் கூட்டம்’ , ‘கிருமி ‘ படங்களுக்குப் பிறகு இப்படம் பெயர் சொல்லும் ஒன்றாக இருக்கும்.
தஞ்சைப் பகுதியில் தொடங்கும் படப்பிடிப்பு கடம்பூர் மலைப் பகுதி, சென்னை என்று நகர இருக்கிறது. மன்னார் வளைகுடா’ படங்களுக்குப் பிறகு இப்படத்தில் வரும் ரேக்ளா வண்டி ரேஸ் பேசப்படும்” என்கிறார் இயக்குநர் நம்பிக்கையுடன்

Comments are closed.