கார்த்திக்கு கிடைத்த இன்னொரு ‘முஸ்தபா’ பாடல்..!

245

thozha 2602
கடந்த வருடம் வெளியான ‘கொம்பன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் தற்போது தயாராகியுள்ள படம் தான் தோழா.. இந்தப்படத்தின் மூலம் தனது எல்லையை விரிவுபடுத்தும் விதமாக தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்துள்ளார் கார்த்தி. படத்தை இயக்கியிருப்பவரும் தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி தான்.

பி.வி.பி.சினிமா தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற உள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப்படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார்.

‘தோழா என்னுயிர் தோழா’ என்கிற இந்தப்பாடலை கேட்ட படக்குழுவினர் முன்பு ஏ.ஆர்.ரகுமான் இசையில் நட்பு பற்றி பெருமைகொள்ள கிடைத்த ‘முஸ்தபா.. முஸ்தபா’ பாடல் போல இந்தப்பாடல் இனி நண்பர்கள் மத்தியில் மிக பிரபலமாக விளங்கும் என சந்தோஷப்பட்டார்களாம்.

Comments are closed.