குழந்தைகளை சந்தோஷப்படுத்துவதற்காக 600கி.மீ பயணம் செய்த கார்த்தி..!

207

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் ஜீவன் பவுண்டேசன் அமைப்பின் ஒரு அங்கமான மையோபதி (Myopathy) என்கின்ற தசைநார் அழிவு நோய்க்கான ஆராய்ச்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பிறவியிலேயே சின்னக்குழந்தைகளை தாக்கும் நோய்களுள் ஒன்றுதான் தசைநார் அழிவு நோய்..

இந்த நோய்க்கான மருத்துவமும் அது சம்பந்தமான கல்வி மையமும் இங்கே செயல்பட்டு வருகிறது. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இந்த நோய்க்கு உலகெங்கிலும் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று சொல்வதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

இரு தினங்களுக்கு முன் தனது பிசியான வேலைகளுக்கிடையே இந்த மையத்திற்கு 600 கி.மீ பயணம் செய்து சென்னையில் இருந்து வந்த நடிகர் கார்த்தி, அங்கு இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணம், அவர்களை சந்தோஷப்படுத்துமாறு தனது நேரத்தை செலவிட்டார்.

‘சிறுத்தை’ படம் மூலம் பிறந்த குழந்தைகள் மனதையும் ஆக்கிரமித்திருக்கும் கார்த்தியை அந்த சிறுவர்கள் அண்ணா, அண்ணா என அன்புடன் அழைத்து தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தியது நெகிழ்வான காட்சி. சமூகத்தின் மீது அக்கறை கொண்டுள்ள ரியல் ஹீரோ என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் கார்த்தி.

Comments are closed.