தமிழ்சினிமாவுக்கு இது உண்மையிலேயே அசத்தலான கூட்டணி தான்.. தெலுங்கு சீனியர் நாகார்ஜூனாவுடன், தமிழில் முன்னணியில் இருக்கும் கார்த்தி இணைந்து நடிக்கும் இந்த மல்டி ஸ்டாரர் படத்தை தெலுங்கின் பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். இவர் தான் கடந்த வருடம் ராம்சரனை வைத்து சூப்பர் ஹிட்டான ‘எவடு’ படத்தை இயக்கியவர்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக இருக்கும் இந்தப்படத்தை பிவிபி சினிமா பிரமாண்டமாக தயாரிக்கிறது. நாகார்ஜுனாவுக்கு தமிழில் எப்போதும் ஒரு நிலையான இடம் இருக்கிறது. கார்த்திக்கு தெலுங்கில் இருக்கும் மவுசு தற்போது வெளியாகியுள்ள ,மெட்ராஸ்’ படத்தின் மூலம் இன்னும் ஒரு பங்கு கூடியிருகிறது. ஆக இரு மொழி ரசிகர்களும் ஒரு புது அனுபவத்திற்கு தயாராக இருங்கள்..
Comments are closed.