
கலைப்புலி தாணு தயாரிப்பில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள ‘கணிதன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.. இந்த விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்..ரஹ்மானும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.. இவர்கள் கலந்துகொண்டது தாணு தயாரிக்கும் படம் என்பதால் மட்டும் அல்ல.
இந்தப்படத்தை இயக்கியுள்ள டி.என்.சந்தோஷ் ஏ.ஆர்.முருகதாஸின் சிஷ்யர்.. தாணு தயாரித்த ‘துப்பாக்கி’யில் உதவி இயக்குனரான இவரது துடிப்பான வேலையை பார்த்துதான் தாணு இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளார். அதேபோல படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மானின் வலதுகையாக விளங்கும் ட்ரம்ஸ் சிவமணி.. படத்தின் கதாநாயகியாக கேத்தரின் தெரசா நடித்துள்ளார்.
Comments are closed.