மாமனிதர் அப்துல் கலாமால் வெளிச்சம் பெறும் ‘கம்பன் கழகம்’..!

173

ஏ.ஆர்.முருகதாசின் சிஷ்யர் அஷோகன் இயக்கியுள்ள படம் தான் ‘கம்பன் கழகம்’.. முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப்படம் தயாராகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகின்றன. இந்தப்படத்தை தனது குருவான முருகதாஸுக்கு போட்டுக்காட்டி, அவர் படம் பார்த்து கண்கலங்கிய நிகழ்வும் கூட நடந்தது.

தற்போது மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் மறைந்துவிட்டாலும் கூட அவரது பெயரால் இந்தப்படத்திற்கு புது வெளிச்சம் கிடைத்துள்ளது. கல்வியை மையப்படுத்தி ‘கனவு காணுங்கள்’ என அப்துல் கலாம் சொன்ன கருத்தை முன்னிறுத்தி இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் அஷோகன்.

இந்தப்படத்தின் நாயகன் கலாமை போல தானும் மிகப்பெரிய விஞ்ஞானியாகவேண்டும் என்கிற கனவோடு படிக்கின்றவன்.. அதுமட்டுமல்ல, கலாமுக்கு லெட்டர் எழுதி, அவரது பதிலையும் திரும்ப பெற்று, அதனால் இன்னும் ஊக்கத்துடன் படிப்பவன்.. அதாவது கலாமை துரோணராக கொண்ட ஏகலைவன் தான் இந்தப்படத்தின் கதாநாயகன்.

அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் அப்துல் கலாம், கதாநாயகன் படிக்கும் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தும் காட்சியை படமாக்க விரும்பினாராம் இயக்குனர் அசோகன்.. இதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பே அவர் முயற்சி செய்ய, ஆனால் அப்போது கலாமின் உடல்நிலையை காரணம் காட்டி அவரது உதவியாளர்கள் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.

ஆனால் அவருக்கு பதிலாக வேறொருவரை வைத்து படமாக்க விரும்பாமல் அந்தக்காட்சியையே நீக்கிவிட்டாராம் இயக்குனர் அஷோகன்.. சமீபத்தில் மறைந்த அப்துல் கலாமின் மறைவு மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் தற்போதைய சூழலில் ‘கம்பன் கழகம்’ படம் கலாமையும் அவரது கருத்துக்களையும் முன்னிறுத்தி படமாக்கப்பட்டிருப்பதால் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.

Comments are closed.