கமல் vs கமல் ; முந்துவது யார்..?

246

 

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு இந்தியா திரும்பிய கமல் தற்போது ரமேஷ் அரவிந்த் இயக்கும் ‘உத்தமவில்லன்’ படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். படத்தின் முக்கால்வாசி ஷூட்டிங் முடிந்துவிட்டதாக தெரிகிறது.

இதை முடித்துவிட்டு வந்து மீண்டும் ‘விஸ்வரூபம்-2’விற்கான பாக்கி இருக்கும் தொழிநுட்ப பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறாராம். இதற்கிடையே அடுத்த மாதம் கமல் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக்கிற்கான படப்பிடிப்பும் ஆரம்பிக்கப்பட இருக்கிறதாம்.

இந்த நிலையில் ‘விஸ்வரூபம்-2’விற்கு முன்பாகவே ‘உத்தம வில்லன்’ ரிலீஸானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றும் சொல்லப்படுகிறது. கடந்த நவம்பரிலேயே ரிலீஸாகிவிடும் என்று சொல்லப்பட்ட விஸ்வரூபம்-2 வெளியாவதில் ஏன் இந்த தாமதம் என்பது கமலுக்கு மட்டுமே தெரிந்த தங்கமலை ரகசியம்.

Comments are closed.