பாபநாசம் இயக்குனருக்கு கமல் அனுப்பிய நன்றி எஸ்.எம்.எஸ்..!

216

 

கமல் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் ‘பாபநாசம்’ படத்தை முடித்துவிட்டு அதன் ரிலீசுக்கான தேதியை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.  மலையாள ரீமேக் தான் என்றாலும் மலையாளத்தில் நடித்த மோகன்லாலின் ‘ஜார்ஜுகுட்டி’ கதாபாத்திரமும், தமிழில் நடித்துள்ள கமலின் ‘சுயம்புலிங்கம்’ கதாபாத்திரமும் வெவ்வேறு விதமான தனித்தன்மை கொண்டவை என்கிறார் ஜீத்து ஜோசப்.

அதுமட்டுமல்ல, மொத்தப்படத்தின் ஷூட்டிங்கும் முடிந்த மறுநாள் ஜீத்து ஜோசப்புக்கு கமலிடம் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது.  அதில் ஜீத்துவின் டைரக்சனில் நடித்தது எந்த அளவுக்கு தனக்கு சந்தோஷமாகவும் வசதியாகவும் இருந்தது என்றும் ஜீத்து ஜோசப்பை தனது பழைய நண்பரும் பிரபல மலையாள சீனியர் இயக்குனருமான ஐ.வி.சசிக்கு சமமானவர் என ஒப்பிட்டும் இருந்தாராம் கமல். அதைப்பார்த்துவிட்டு ரொம்பவே நெகிழ்ந்து போனாராம் இயக்குனர் ஜீத்து ஜோசப்.

Comments are closed.