சிவாஜி சிலை விஷயத்தில் கமல் கருத்து…!

218

kamal - sivaji statue

சென்னை மெரினா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருப்பதால் இதனை அகற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் புதன்கிழமையன்று நள்ளிரவில், இயந்திரங்களின் மூலம் சில மணி நேரத்தில் சிவாஜியின் சிலை அகற்றப்பட்டது. அங்கிருந்து ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்ட சிலை, சென்னை சத்யா ஸ்டுடியோவிற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் சிவாஜி கணேசனின் மணி மண்டபத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.

இந்த நிகழ்வு சிவாஜி ரசிகர்களையும் பொதுமக்களையும் ரொம்பவே வருத்தப்பட வைத்துள்ளது. நடிகர் கமலையும் இந்த செயல் மிகவும் பாதித்துள்ளது. இந்தநிலையில் “சிவாஜி, ரசிகர் மனதிலும், நடிக்க நினைத்த தமிழர் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலை செய்வோம்.. அதை எந்த நாளும் காப்போம். அரசுக்கும் அப்பால் என் அப்பா” என குறிப்பிட்டுள்ளார்..

Comments are closed.