மோகன்லால் எழுதிய நூலை வெளியிட்டார் கமல்..!

179

கமலுக்கும் மோகன்லாலுக்கும் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் ஏற்பட்ட நட்பு, தொட்டுத் தொடர்வதை பூர்வஜென்ம பந்தம் என்றுதான் சொல்லவேண்டும்.. மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தில் கமல் நடித்து வருவதை வேறு எப்படி சொல்வது?

அதுமட்டுமல்ல மோகன்லாலின் மகன் பிரணவும் கமல் படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்க்கிறார். தற்போது தென்காசி மற்றும் கேரள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு பிஸியாக நடந்துவருகின்ற நிலையில் மோகன்லால் அழைப்பை ஏற்று கொச்சிக்கு சென்று வந்திருக்கிறார் கமல்.

விஷயம் இல்லாமலா..? மோகன்லால் தனது பயண அனுபவங்கள் குறித்து ‘மோகன்லாலிண்டே பயணங்கள்’ என்னும் நூலை எழுதியுள்ளார். இந்தப்புத்தகத்தில் மோகன்லால் தனது பிரத்யோக கேமராவினால் எடுத்த அழகான புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த நூலை வெளியிடுவதற்காகத்தான் கமல் கொச்சிக்கு சென்று வந்துள்ளார். இந்த விழாவில் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பிரியதர்ஷன் மற்றும் இன்னொரு ஆஸ்தான இயக்குனராக மாறிவரும் மேஜர் ரவி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Comments are closed.