விசாகபட்டிணம் கிளம்ப தயாராகும் கமல்..!

201

kamal-hassan
சபாஷ் நாயுடு படத்தின் பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கிவந்த நிலையில் தனது வீட்டின் மாடிப்படிகளில் இருந்து தவறி விழுந்த கமலை, காலம் சில வாரங்களாக வீட்டிற்குள்ளேயே முடக்கிப்போட்டுவிட்டது.. தற்போது ஓரளவு குணமடைந்துள்ள கமல், தனது காலை விந்தியபடியே நடந்துகொண்டு உடற்பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அவரது காலை வலுப்படுத்துவதற்கான பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. குணமடைந்ததும் மும்மொழிகளில் தான் நடித்து இயக்கிவரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை வரும் செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் விசாகபட்டிணத்தில் துவங்க திட்டம் வைத்துள்ளார் கமல். இந்தப்படத்தின் பாதி படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.