முட்டை ஊழலை வெளிப்படுத்திய கமல்..!

207

kamal fans action

கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசுக்கும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் நடந்து வரும் யுத்தம் அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான். அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் பரவிக்கிடகிறது என குற்றம் சாட்டினார் கமல்..

அப்படி பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டினால் எப்படி, எங்கே ஊழல் என ஆதாரப்பூர்வமாக நிரூபியுங்கள் என கமலுக்கு சவால்விட்டு அவரை வம்பிழுக்கும் வேலையை நாள்தோறும் செய்து வருகின்றனர் நம் அமைச்சர் பெருமக்கள்..

அதனால் ஊழல் குறித்த தகவல்களை திரட்டி அம்பலப்படுத்துங்கள் என தனது ரசிகர்களிடம் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் கோரிக்கை வைத்தார் கமல்.

இதோ இப்போது கமல் ரசிகர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் பல பள்ளிகளில் சத்துணவில் கெட்டுப்போன முட்டை வழங்குவதாகவும் அதில் மிகப்பெரிய ஊழல் நடந்து வருவதாகவும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்துக்கு பெருமையே. எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது” என்று பதிவிட்டுள்ளார்..

Comments are closed.