காளிதாஸ்-மஞ்சிமாவை தமிழுக்கு வரவேற்போம்..!

222

kalidas-manjima

மலையாளத்தில் நடித்துவரும் நடிகைகள் தமிழில் அறிமுகமாவது வாடிக்கையான ஒன்றுதான்.. ஆனால் ஆச்சர்யமாக, மலையாள நடிகர் ஜெயராம் தனது மகன் காளிதாஸை தமிழில் தான் அறிமுகப்படுத்துவேன் என ஒற்றைக்காலில் நின்றார்.. அதன்படி ‘ஒரு பக்க கதை’ படத்தில் நடித்து முடித்துவிட்ட காளிதாஸ் ஜெயராம் அந்தப்படம் ரிலீசாகாத நிலையில் ‘மீன் குழம்பும் மண்பானையும்’ என்கிற படத்தில் நடித்து முடித்துவிட்டார். அந்த படம் இன்று ரிலீசும் ஆகிவிட்டது..

அதேபோல மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான ‘ஒரு வடக்கன் செல்பி’ என்கிற ஹிட் படம் மூலமாக கதாநாயகியாகவும் ஆனவர் தான் மஞ்சிமா மோகன். தற்போது சிம்புவுக்கு ஜோடியாக ‘அச்சம் என்பது மடமையடா’ என்கிற படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். பல தடைகளை தாண்டி இந்தப்படமும் இன்று வெளியாகியுள்ளது..

தமிழ்கூறும் நல்லுலகுக்கு காளிதாஸ், ஜெயராம் இருவரையும் வரவேற்பதோடு, இருவரின் தமிழ் திரையுலக பயணம் வெற்றியடைய வாழ்த்துவோம்..

Comments are closed.