சமீபத்தில் அருள்நிதி நடிப்பில் ‘டிமாண்டி காலனி’ என்கிற படம் வெளியானது. அஜய் ஞானமுத்து என்பவர் இயக்கிய இந்த த்ரில்லர் படம், பேய்ப்படங்களிலேயே கொஞ்சம் புதுமாதிரியாக இருந்ததால் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது. கடந்து மூன்று நாட்களுக்கு முன் அருள்நிதி திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
இந்தநிலையில் தனது பேரன் அருள்நிதி நடித்த ‘டிமாண்டி காலனி’ படத்தை பார்க்க விரும்பிய கலைஞருக்கு அவரது இல்லத்திலேயே படம் திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த கலைஞர் அருள்நிதியின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக பாராட்டியுள்ளார்.
Comments are closed.