
‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தில் கமல், கௌதமி இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள். ஜித்து ஜோசப் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடுபுழாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ‘த்ரிஷ்யம்’ படத்தை பொறுத்தவரை அதில் மிக முக்கியமான இரண்டு கதாபாத்திரங்கள் மோகன்லாலை மட்டுமல்ல நம்மையும் சேர்ந்து மிரட்டுவார்கள்.
ஒன்று அசிஸ்டண்ட் கமிஷனராக நடித்திருந்த ஆஷா சரத்.. இன்னொருவர் எஸ்.ஐ ஆக நடித்த கலாபவன் சாஜன். தமிழில் ஆஷா சரத் கேரக்டரில் அவரே நடிப்பதால் அந்த கதாபாத்திரத்தின் மெரிட் குறையாமல் அவர் காப்பற்றி விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
அடுத்ததாக எஸ்.ஐ ஆக நடித்த கலாபவன் சாஜன் கேரக்டரில் தமிழிலும் மலையாளத்திலும் பிரபலமாக உள்ள நடிகரான கலாபவன் மணி நடிக்கிறார். சொல்லப்போனால் படத்தில் ஆஷா கமலுக்கு வில்லி என்றால், இவர்தான் வில்லன்.. கமலை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை மானசீகமாக டார்ச்சர் செய்யும் வில்லன்.. ஆக, உத்தம வில்லனையே மிரட்டும் உக்கிர வில்லன் என இவரை சொல்லலாம்.
Comments are closed.