“முதுகில் குத்தினார்கள்” ; ‘கடுகு’ விழாவில் குமுறிய பாண்டிராஜ்..!

264

kadugu audio launch

இயக்குனர் விஜய் மில்டனின் அடுத்த படைப்பாக உருவாக்கி இருக்கிறது ‘கடுகு’.. இயக்குனர் ராஜகுமாரன் ஹீரோ, பரத் வில்லன் என காம்பினேஷனையே வித்தியாசமாக்கி படத்தை இயக்கி முடித்துவிட்டார் விஜய் மில்டன்.. படத்தை ஜோதிகாவுடன் சேர்ந்து பார்த்தார் சூர்யா.. இருவருக்குமே ஏகமனதாக பிடித்துப்போக, சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தப்படத்தை வாங்கியது. இப்போது ஷக்தி பிலிம் பேக்டரி இந்தப்படத்தை வெளியிடுகிறது..

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சூர்யா முன்னிலையில் நடைபெற்றது.. விழாவில் பேசிய சூர்யா, இந்தப்படத்தை பார்த்ததுமே இதை விட்டுவிட கூடாது என தோன்றியது.. இப்படிப்பட்ட படங்களில் நடிக்கவேண்டும் என பலமுறை நான் நினைத்தாலும், சூழல் சரியாக அமைந்ததில்லை.. அதனால் இப்டி உருவாகும் படங்களிலாவது என்னுடைய பங்களிப்பு இருக்கவேண்டும் என்பதாலேயே இந்தப்படஹ்தை வாங்கி வெளியிடுகிறோம்” என்றார்..

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் பாண்டிராஜ், “நான் 2டி நிறுவனத்தின் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மாதிரி.. அவர்களது எந்த ஒரு விழாவிலும் தவறாமல் இடம்பெறுவேன்.. அதிலும் விஜய் மில்டன் இயக்குனராக அவதாரமெடுக்க நானும் ஓரு காரணம்.. நல்ல நண்பர் அவர்..” என வாழ்த்தினார்..

தொடர்ந்து பேசும்போது, “சினிமாவில் என்னை முதுகில் குத்தியவர்கள் தான் அதிகம்.. குறிப்பாக நான் அறிமுகப்படுத்திய எடிட்டர்கள் சிலர் என்னை முதுகில் குத்தி அதிர்ச்சி ஏற்படுத்தினார்கள்.. ஆனாலும் எனது அடுத்த படத்திலும் புதிய எடிட்டர் ஒருவரை அறிமுகப்படுத்த இருக்கிறேன்.” என தனது குமுறலையும் வெளிப்படுத்தினார்.

Comments are closed.