
மஞ்சப்பை என்கிற பேமிலி சென்டிமென்ட் ஹிட் படத்தை இயக்கிய ராகவன் அடுத்து இயக்கும் படம் தான் ‘கடம்பன்’.. ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்திற்கு முதலில் ‘தனிக்காட்டு ராஜா’ என பெயர் வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. பின்னர் ‘கடம்பன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது கொடைக்கானல் அருகில் உள்ள தாண்டிக்குடியில் சுமார் நாற்பது நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள்.
இந்தப்படத்தின் கதை மலைவாழ் பகுதி மக்களை மையமாக கொண்டது என்பதால், இதற்காக கிட்டத்தட்ட 100 ஏக்கர் பரப்பளவில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் இயற்கையான தோட்டம் ஒன்று அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தாய்லாந்திற்கு சென்று இன்னும் சில முக்கியமான காட்சிகளை சுமார் 20 நாட்கள் படமாக்க திட்டமிட்டுள்ளனராம். மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்கு கேரளா செல்கிறார்களாம்.
Comments are closed.