ரஜினி ரசிகர்களுக்கு ‘கபாலி செல்வா’ தரும் ட்ரீட்..!

181

kabali selva

இயக்குனர் மற்றும் நடிகர் கபாலி செல்வா இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘12.12.1950’ படம்.. தேதியை பார்த்தது அட இது சூப்பர்ஸ்டார் பிறந்தநாளாச்சே என பிளாஷ் அடிக்கிறதா..? விஷயமும் அதே தான்.. என்றுமே புகழின் உச்சியிலும், மக்களின் மனத்திலும் ஆட்சி நடத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒரு தீவிர ரசிகன் பற்றிய படமாகும்.

இந்த கபாலி செல்வா, (அட.. நாட்டுப்புற பாட்டு உட்பட பல படங்களில் நடித்தவர், இதுதாண்டா போலீஸ் ராஜசேகரின் தம்பி தாங்க) நாசா விண்வெளி மையத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறாராம். விஷயம் இதுதான்.

அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் நேற்று தங்களது ‘வாயேஜர்’ விண்கலம் விண்ணுக்கு சென்று 40 ஆண்டு காலம் ஆகியுள்ளதை கொண்டாடியது. இதனை தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக சாதித்து, விண்வெளியையும் மிஞ்சும் ரசிகர் படை கொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி கபாலி செல்வா ‘நாசா’ விண்வெளி மையத்திற்கு சூப்பர் ஸ்டாரின் புகழை பற்றியும் 40 ஆண்டு கால சாதனைகள் பற்றியும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் கபாலி செல்வா.

அடுத்த மாதம் ரிலீசாக போகும் எனது படமான ‘12.12.1950’ உலகத்தில் உள்ள எல்லா ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சமர்ப்பணமாகும். ரஜினி சாரின் பிறப்பை, அவரது பிறந்த நாளன்று மட்டும் கொண்டாடாமல், தினந்தோறும் கொண்டாடும் ரசிகர்கள் நாங்கள் நாசா’ வுக்கு எப்படி ஒரே ஒரு ‘வாயேஜர்’ விண்கலமோ, அது போல் எங்களுக்கு ஒரு சூப்பர்ஸ்டார்” எனக்கூறியுள்ளார்

Comments are closed.