‘டம்மி போஸ்டரால் கபாலிக்கு வந்த சங்கடம்..!

192

kabali-madaari poster issue
பிரபல நடிகர்களின் படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்போ போஸ்டரோ வருவதற்கு முன் சம்பந்தப்பட்ட நடிகரின் ரசிகர்களே தங்களது விருப்பப்படி நடிகரின் புகைப்படத்தை வைத்து டிசைன் செய்து ஒரிஜினல் போஸ்டர் போல சோஷியல் மீடியாக்களில் வெளியிடுவதுண்டு.. இதேபோல ஒரு போஸ்டரால் தான் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படத்துக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது..

இரண்டு தினங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் இர்பான் கான், தான் நடித்து வரும் ‘மதாரி’ படத்தின் போஸ்டரை வெளியிட்டு, இதை கபாலி படத்தினர் காப்பி அடித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.. ஆனால் யாரோ ஒரு ரசிகர் ‘மதாரி’ பட போஸ்டர் டிசைனை அப்படியே ‘கபாலி’ படத்துக்கு பயன்படுத்தி இணையத்தில் உலவாவிட்டுள்ளார்..

இந்த உண்மையை விளக்கி கூறியுள்ள ‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளர் தாணு, தயவு செய்து ரசிகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என்றும் ஊடகங்களும் அவற்றை உண்மை என்று நம்பி தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments are closed.