‘காளி’ பட ‘அரும்பே’ பாடலை வெளியிட்ட அனிருத்..!

250

kaali - arumbe song

கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் அடுத்த படமான ‘காளி’ விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. ‘காளி’ படத்தின் ‘அரும்பே’ பாடலை நேற்று இசையமைப்பாளர் அனிருத் ரிலீஸ் செய்தார். இந்த பாட்டோடு இப்பாடலின் வீடியோவும் ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பம்சமாகும். இந்த ‘அரும்பே’ பாடல் ரசிகர்களின் இலவச சட்டப்பூர்வமான டவுன்லோடிற்கு Vijayantony.com என்ற இணையதளத்தில் தயாராகவுள்ளது.

இந்த ‘அரும்பே’ பாடலை எழுதியுள்ள பாடலாசிரியர் விவேக் இது குறித்து பேசுகையில், “விஜய் ஆண்டனி சாரின் இசையில் நான் எழுதியிருக்கும் முதல் பாடல் கிருத்திகா அவர்களுடன் இதற்கு முன்பு ஒரு மியூசிக் வீடியோவிற்காக பணிபுரிந்திருந்தாலும் ஒரு படத்திற்காக அவருடன் பணிபுரிவது இது தான் முதல் முறை. இருவரும் தந்த சுதந்திரம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. எனது வரிகளை படித்ததும் விஜய் ஆண்டனி சார் எனக்கு போன் செய்து பாராட்டினார். இந்த பாடலும் இந்த படமும் நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்களால் நிச்சயம் ரசிக்கப்பட்டு பாராட்டப்படும் என நான் நம்புகிறேன்” என்றார்.

Comments are closed.