பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துவரும் ‘காலா’ படத்தில் நாயகியாக நடிப்பவர் பாலிவுட் நடிகையான ஹூமா குரோஷி.. பாலிவுட் ஹிட் படமான ‘கேங்க்ஸ் ஆப் வாசப்பூர்’ நாயகி ஹூமா குரேஷி.. கடந்த வருடம் மலையாளத்தில் ‘ஒயிட்’ என்கிற படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
பாலிவுட் நடிகையான இவரது பேவரைட் ஹீரோ யார் தெரியுமா..? ஏதோ ஒரு பாலிவுட் கான் நடிகர் என்றோ, இல்லை சூப்பர்ஸ்டார் ரஜினி என்றோ நீங்கள் நினைத்தால், ஸாரி.. பதில் அதுவல்ல.. துல்கர் சல்மான் இவரது பேவரைட் ஹீரோவாம். துல்கர் நடித்த படங்களை ஒன்றுவிடாமல் பார்த்து வரும் ஹூமா, அவரது இயல்பான, ஸ்டைலிஷான நடிப்பு தன்னை மயக்கி விடுகிறது என்று ஒரு பேட்டியிலேயே கூறியுள்ளார்.

Comments are closed.