“சரியான நேரத்தில் சரியான மனிதரை சந்தித்தது தான் என் அதிர்ஷ்டம்” – ஜெட்லீ

163


அதிரடி சண்டைக்காட்சிகளுக்கு பெயர் போனவர் தான் சீன சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான ஜெட்லீ. நேற்று முன் தினம் ஹாங்காங்கில் நடைபெற்ற ஹாங்காங் திரைப்பட விருது வழங்கும் விழாவில். ஜெட்லீக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை மிகச்சிறந்த இயக்குனரான சாங் சிங் யென்னிடமிருந்து பெற்றுக்கொண்டார் ஜெட்லீ. இந்த இயக்குனர் வேறு யாருமல்ல.. 35 வருடங்களுக்கு முன் ஜெட்லீயை தான் இயக்கிய ‘ஷாலின் டெம்பிள்’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் தான்.

இதுபற்றி ஜெட்லீ சொல்லும்போது, “சரியான நேரத்தில் சரியான மனிதரை சந்திப்பது நம் வாழ்க்கையையே மாற்றிவிடும். அந்த வகையில் சாங் சிங் யென்னை சந்தித்தது என் அதிர்ஷ்டம்” என்று நெகிழ்வுடன் குறிப்ப்பிட்டுள்ளார்.

Comments are closed.