
வாவ்.. என்ன ஆச்சர்யம்..! சினிமாவில் நுழைந்த இந்த 13 வருடங்களில் இப்போதுதான் அஜித் படத்துக்கு முதன் முறையாக இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இன்னொரு ஆச்சர்யம் இந்தப்படத்தின் இயக்குனரான கௌதம் மேனனுடன் ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் கூட்டணியும் அமைத்திருக்கிறார்.
கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க, வாரணம் ஆயிரம் உள்பட அவரோட பல படங்களுக்கு இசை அமைச்சவர் ஹாரிஸ் ஜெயராஜ். இன்னும் சொல்லப்போனால் கௌதம் மேனன் படங்களோட வெற்றில ஹாரிஷ் ஜெயராஜோட இசைக்கு முக்கியமான பங்கு உண்டு. இவங்களுக்குள்ள கடந்த ஆறு வருஷத்துக்கு முன்னாடி மனக்கசப்பு ஏற்பட்டு ரெண்டுபேரும் பிரிஞ்சாங்க.
அதுக்கப்புறமா ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜான்னு ஒரு ரவுண்ட் போயிட்டு வந்துட்டார் கௌதம். இப்போ அஜித்தோட 55வது படத்தை கௌதம் மேனன் தான் இயக்குறார். இத்தனை நாளா பிரிஞ்சிருந்த இந்த இரண்டு துருவங்களும் ஆறு வருஷம் கழிச்சு இப்போ இந்தப்படத்துல மீண்டும் இணைஞ்சிருக்காங்க.
இந்த இணைப்பு நடவடிக்கையை அஜித் தான் எடுத்திருப்பார்னு ஃபீல்டுல ஒரு பேச்சும் அடிபடுது. எப்படியோ நல்ல விஷயம் ஒண்ணு நடந்திருச்சுல்ல.. அந்த சந்தோஷம் போதும். ஹாரிஸின் இசையில் அஜித்தின் பாடல்கள்.. செய்தியை கேட்கும்போதே இனிக்கிறதே..!
Comments are closed.