தமிழ் சினிமாவில் அவ்வப்போது புது முயற்சிகளாக சில வித்தியாசமான படங்கள் வருவதுண்டு,, அப்படி ஒரு படம் தான் சிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார்கில்’. நாயகியுடன் ஊடல் கொண்டுள்ள நாயகனின் சென்னை – பெங்களூர் வரையிலான கார் பயணமும் அதில் நடக்கும் நிகழ்வுகளும் தான் மொத்தப்படமும்..
இதில் முக்கியமாக, தமிழ்சினிமாவில் புதுவிஷயமாக இந்தப்படத்தில் ஒரே ஒருத்தர் தான் நடித்துள்ளார் அவர்தான் நாயகன் ஜிஷ்ணு.. ஜிஷ்ணு கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் மிக வெற்றிகரமான தயாரிப்பாளர் திரு. கலைப்புலி எஸ். தாணு பாடல்களை வெளியிட்டார்.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ‘அய்யனார் வீதி’ பட இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் இந்த படக்குழுவினரை வாழ்த்தி பேசும்போது சிறிய பட்ஜெட் படங்கள் இன்று தியேட்டர்களில் என்ன பாடுபடுகிறது என்பதை தனது பட அனுபவத்தில் இருந்து மனக்குமுறலாக கொட்டினார்.
“இன்றைக்கு தமிழ்சினிமாவில் வாராவாரம் ஐந்து படங்கள் வரை ரிலீசாகி கொண்டு இருக்கின்றன. இதனால் நிறைய தயாரிப்பாளர்கள் தெருவிற்கு வந்துகொண்டிருக்கின்றனர். இதுதான் இன்றைய நிலைமை.. இன்னைக்கு தியேட்டர்காரர்கள் தான் எல்லாத்தையும் முடிவு பண்றாங்க.. ரெண்டுநாள் ஓட்டிட்டு மூணாவது நாள் படத்தை தூக்கிடுறாங்க.. அவங்களை யாரு கேட்கிறது யாராலேயும் கேட்க முடியாது.. ஏன்னா அவங்க வலுவா இருக்கிறாங்க.” என கொட்டி தீர்த்துவிட்டார் ஜிப்ஸி ராஜ்குமார்.

Comments are closed.