
ஒரு படத்தில் இவர் இருந்தால் போதும் அந்தப்படத்திற்கே ஒரு தனி கம்பீரம் வந்துவிடும் என்று சொல்லும் அளவுக்கு இன்றைய இயக்குனர்களின் சாய்ஸாக இருப்பவர் தயாரிப்பாளராக இருந்து குணச்சித்திர நடிகராக மாறிய ஜெயபிரகாஷ் தான்.
தற்போது ஜெயபிரகாஷின் மகன்களான நிரஞ்சன், துஷ்யந்த் இருவரும் ‘ஐவராட்டம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக நித்யா ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் அம்ருத் கலாம் என்பவரும் ஜெய பிரகாஷும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
ஐந்துபேர் மட்டுமே விளையாடகூடிய கால்பந்தாட்டத்தை( சிவகங்கையில் மட்டுமே இதற்கான அரங்கு உள்ளதாம்) மையமாக வைத்து ஒரு புதிய கோணத்தில் இந்தப்படத்தின் கதையை எழுதி இயக்குகிறார் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிதுன்மாணிக்கம்.
இசையமைப்பாளர் செல்வகணேஷின் மகன் சுவாமிநாதன் இந்தப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.
Comments are closed.